எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கும் வீடியோவை வலைதளத்தில் பகிர்ந்த சசி தரூர், மறக்க முடியாத நாள் என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மழை கொட்டியதால் நிலச்சரிவு ஏற்பட்டது. மண்ணில் புதையுண்டும், ஆற்று வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 361 பேர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் உதவி வழங்கச் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். பாய், தலையணை உள்ளிட்ட பொருட்களை வழங்கும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் சசி தரூர் பகிர்ந்துள்ளார்.
வயநாடு மக்களுக்கு உதவி செய்தது மறக்க முடியாத நாள். மறக்க முடியாத ஒன்று எப்போதும் நினைவில் இருக்கும். ஏனெனில் அது சிறப்பு அல்லது மறக்க முடியாதது என சசிதரூர் அந்த பதிவில் உருக்கமாக கூறியுள்ளார்.
மோசமான பாதிப்பு ஏற்பட்டு நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவத்தை, மறக்க முடியாத நாள் என்று சசிதரூர் குறிப்பிட்டதற்கு, கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்து வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025