எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி : வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணிகளில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தேவையான ரூ.7 லட்சம் மதிப்பிலான 12 வகையான நவீன இயந்திர பொருட்கள் நீலகிரி தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 260-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். காணாமல் போன பலரையும் இந்திய ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பிலான மீட்பு நவீன உபகரணப்பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் முபாரக் தலைமையில் நிர்வாகிகள் குன்னூர் ஆர்.டி.ஓ. சதீஷ்குமாரிடம் உபகரணங்களை வழங்கினர்.
முதல் கட்டமாக மீட்பு பணிக்கு தேவையான கேஸ் கட்டர், கான்கிரீட் உடைக்கும் நவீன இயந்திரங்கள், ஸ்டிரெக்ச்சர்கள், பணிகளில் ஈடுபடுவோருக்கான தேவையான பாதுகாப்பு உடைகள், காலணிகள், முக கவசம், சேனிடைசர், இரவு நேரங்களில் மீட்பு பணியில் ஈடுபட எல்.இ.டி. லைட்டுகள் உட்பட 12 வகையான பொருட்களை கேரளாவிற்கு அனுப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் போஜன், நகர செயலாளர் ராமசாமி, நகராட்சி துணை தலைவர் வாசிம்ராஜா, ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |