Idhayam Matrimony

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய அரசு பேருந்து- 6 நாட்களுக்கு பிறகு மீட்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      இந்தியா
Vayanad 2024 08 04

Source: provided

வயநாடு : வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் சூரல் மலையில் சிக்கிய அரசுப் பேருந்து 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. 

இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் சூரல் மலையில் சிக்கிய அரசுப் பேருந்து 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில், ராணுவம் அமைத்த பெய்லி பாலம் வழியாக பேருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

சூரல் மலை முதல் கல்பட்ட பகுதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் தினசரி பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சூரல் மலையில் நிலச்சரிவுக்கு முன்னதாக பேருந்து இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. 

அதன்பிறகு, நிலச்சரிவு ஏற்பட்டதால் பேருந்து இயக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், 6 நாட்களுக்கு பிறகு பேருந்து மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து