Idhayam Matrimony

வெப்ப அலைகளால் ஆந்திராவில் அதிக உயிரிழப்பு - தமிழகத்தில் குறைவு : கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு தகவல்

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : கடந்த 10 ஆண்டுகளில் வெப்ப அலைகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆந்திராவில் அதிகம் என்றும் தமிழகத்தில் குறைவு என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 மக்களவையில் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி, கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் வெப்ப அலைகள் காரணமாக நிகழ்ந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். 

இதற்கு அறிவியல்-தொழில் நுட்பம் மற்றும் புவிஅறிவியல் துறை இணை அமைச்சர்(தனிப்பொறுப்பு) டாக்டர். ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், நாடு முழுவதும் வெப்ப அலைகளால் 2013-ம் ஆண்டில் 1,216, 2014-ல் 1248, 2015-ல் 1908, 2016 -ல் 1338, 2017-ல் 1127, 2018-ல் 890, 2019-ல் 1274, 2020-ல் 530, 2021-ல் 374, 2022-ல் 730 பேர் மரணம் அடைந்துள்ளனர். 

குறிப்பாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வெப்ப அலைகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. கடந்த பத்து வருடங்களில் 5 பேர் தான் தமிழகத்தில் வெப்ப அலைகளால் இறந்தவர்கள் ஆவர்.

அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் பொதுமக்கள், 2013-ல் 418, 2014-ல் 244, 2015-ல் 654, 2016-ல் 312, 2017 -ல் 231, 2018-ல் 97, 2019-ல் 128, 2020-ல் 50, 2021 -ல் 22, 2022 -ல் 47 பேர் இறந்தனர். தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (என்.சி.ஆர்.பி.), உள்துறை அமைச்சகம் ஆகியவை வழங்கிய விவரங்கள் மூலமாக இந்த தரவுகள் கிடைக்கப்பட்டுள்ளன, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து