Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது : இதுவரை 5 லட்சம் பேர் தரிசனம்!

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      இந்தியா
Amarnath

Source: provided

 வருடாந்திர அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தத்திற்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கிய நாள் முதல் சுமார் 5 லட்சம் பக்தர்கள் புனித குகைக் கோயிலைத் தரிசனம் செய்துள்ளதாக ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

 அமர்நாத் யாத்திரை ஒருநாள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் தொடங்கியுள்ளது. ஜம்முவிலிருந்து 1,873 பக்தர்கள் அடங்கிய மற்றொரு குழு வடக்கு காஷ்மீரிலிருந்து புறப்பட்டது.  தெற்கு காஷ்மீரின் நுன்வான்(பஹல்காம்) அடிப்படை முகாமிலிருந்து பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸில் இருந்து 1,873 பக்தர்களுடன் 69 வாகனங்கள் ஜம்முவில் இருந்து வடக்கு காஷ்மீரின் பால்டால் அடிப்படை முகாமிலிருந்து அதிகாலை 3.25 மணிக்கு புறப்பட்டது. 

சாரி முபாரக் சுவாமி பஹல்காம் வழியாகக் குகைக் கோயிலுக்கு செல்லவுள்ளார். மேலும் ஆகஸ்ட் 14 வரை பஹல்காமில் இருக்கும் குகைக் கோயிலுக்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஹல்காம் பாதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  இதையடுத்து, அமர்நாத் பக்தர்கள் செல்லும் வழி நெடுகிலும் ஏராளமான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து