எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம்அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமலா கோபாலன் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும், தந்தையார் டொனால்டு ஜேஸ்பர் ஹாரிஸ் ஆப்பிரிக்க தேசமான ஜமைக்காவை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டதை தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக 59 வயதான அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹரிஸ் முன்னிறுத்தப்பட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆளும் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் 99 சதவிகிதத்தினரின் வாக்குகள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகக் கிடைத்துள்ளன. இந்த வாக்கெடுப்பில் நாடு முழுவதுமிருந்து ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் சுமார் 4,567 பேர் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்தகட்டமாக துணை அதிபர் வேட்பாளர் யார்? என்பதை கமலா ஹாரிஸ் விரைவில் அறிவிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி தேசிய ஒருங்கிணைப்புச் செயலர் ஜேசன் ரே விரைவில் அவரிடம் அங்கீகாரச் சான்றிதழை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப்பைவிட கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு சற்றே அதிகரித்திருப்பது, தேர்தலுக்கு முந்தைய சமீபத்திய கருத்துக்கணிப்பில் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |