எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டாக்கா, வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகும் தலைநகர் டாக்கா மற்றும் சில பகுதிகளில் வன்முறை நிகழ்ந்துள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட தொடர் வன்முறையையடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ராணுவ விமானம் மூலம் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
இதனால் வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால் வங்கதேசத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய பிறகும் தலைநகர் டாக்கா மற்றும் சில பகுதிகளில் வன்முறை நிகழ்ந்துள்ளது.
டாக்காவில் போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகைக்குள் சென்று சூறையாடினர். ஹசீனாவுக்கு சொந்தமான நிறுவனங்களும் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. மேலும் அந்த நாட்டு அமைச்சர்கள், எம்.பி.க்களின் வீடுகளும் தாக்கப்பட்டன.
நேற்று முன்தினம் மட்டும் வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 119 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 119 பேர் கொல்லப்பட்ட நிலையில் தற்போது வரை வங்கதேச வன்முறையில் 440 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை 37 உடல்கள் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் நேற்று செவ்வாய்க் கிழமை காலை வங்கதேசத்தில் சற்று அமைதி நிலவியதாகவும் பேருந்து, ஆட்டோ என போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளதாகவும் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வாகனங்கள் அலுவலகத்திற்குச் செல்வதாகவும் அந்த நாட்டு இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |