முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா: சுவாமிமலையில் இருந்து புறப்பட்டு சென்ற பக்தர்கள்

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2024      ஆன்மிகம்
Swamimalai 2024 08 07

Source: provided

கும்பகோணம் :  கும்பகோணம் வட்டம், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் இருந்து அறுபடை வீடுகளுக்குச் செல்லும் ஆன்மிக சுற்றுலாப் பேருந்து நேற்று புறப்பட்டுச் சென்றது. மொத்தம் 6 பேருந்துகளில், 204 பக்தர்கள் உட்பட 236 பேர் புறப்பட்டுச் சென்றனர்.

முருகனின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், ஆன்மிக சுற்றுலா பயணம் உரிய வசதிகள் செய்து கொடுத்து அழைத்துச் செல்லப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, சுவாமிமலை முருகன் கோயிலில் இருந்து, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 204 பக்தர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட மொத்தம் 236 பேர், 6 பேருந்துகளில் நேற்று முருகனின் அறுபடை வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

முன்னதாக, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. ஆகியோர் கொடியசைத்து ஆன்மிக சுற்றுலா பயணத்தை தொடங்கி வைத்து பக்தர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினர். 

இந்த பேருந்தில் செல்பவர்கள் நேற்று திருத்தணி சென்றடைந்து அங்கு தங்கி விட்டு நாளை வியாழக்கிழமை காலை மணிக்கு திருத்தணி முருகனை தரிசிப்பார்கள். அதன்பிறகு, பேருந்துகள் பழநி சென்றடையும்.

வரும்  9-ம் தேதி காலை பழநியில் தரிசனம் முடித்து விட்டு, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச் சோலை கோயில்களுக்கு பேருந்துகள் செல்லும். அந்தக் கோயில்களில் தரிசனம் முடித்து விட்டு அனைவரும் இரவு திருச்செந்தூர் சென்றடைவர். 

வரும் 10-ம் தேதி காலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு, அன்று மாலை மீண்டும் அனைவரும் சுவாமிமலை திரும்புவர் என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து