எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரீஸ் : ஒலிம்பிக்ஸ் முடிந்த நிலையில் பிரான்ஸ் அரசியலில் சூழல் தற்போது பரபரப்பாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் விறுவிறுப்பாக நடந்து வந்த ஒலிம்பிக்ஸ் திருவிழா நேற்று முன்தினம் இரவுதான் முடிவடைந்தது. விழா நிறைவு நிகழ்ச்சிகள் பிரமாண்டமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தின நிகழ்ச்சிக்கு முன்னதாக சந்தேகத்துக்கிடமான வகையில் ஈபிள் கோபுரத்தில் ஏறி அதை அளவெடுத்துக் கொண்டிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டை அணியாத அவர் கோபுரத்தில் ஏறி அளவெடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவிய நிலையில் இது போலீசார் கவனத்துக்கு வந்தததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவின்போது மெட்ரோ வழித்தடங்களைத் துண்டித்து மர்ம நபர்கள் போக்குவரத்தை நிறுத்த முயன்றனர். அதன்பின் நெட்ஒர்க் கேபிள்களை துண்டித்து தொலைத்தொடர்பு சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தினார். பிரான்சில் சமீபத்தில் நடந்த பிரதமர் தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை இழந்து இடது முன்னணியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற அசாதாரண சூழ்நிலை எழுந்தது.
ஆனால் ஒலிம்பிக்ஸை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரோன் முடிவு செய்தார். பிரதமர் கேபிரியல் அட்டல் கொடுத்த ராஜினாமா கடிதத்தையும் நிராகரித்தார். இந்நிலையில் தற்போது ஒலிம்பிக்ஸ் முடிவடைந்துள்ள நிலையில் பிரான்ஸ் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமைய உள்ள புதிய அரசின் நிலைப்பாடும், ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களில் அதன் தாக்கமும் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025