முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாத லட்டு வாங்க ஆதார் கட்டாயம் : தேவஸ்தானம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2024      ஆன்மிகம்
Tirupati-laddu 2024-08-30

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆதார் கொண்டு வந்தால் மட்டுமே லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று தேவஸ்தானம்   உத்தரவிட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரக் கூடிய பக்தர்களுக்கு இலவச தரிசனம், ரூ. 300 டிக்கெட், சர்வ தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் என எந்த டிக்கெட்டுகளில் சுவாமி தரிசனம் செய்தாலும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

இது தவிர கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் கவுன்டர்களில் ரூ. 50 கட்டணம் செலுத்தி லட்டுக்களை பெற்று வந்தனர். இருப்பினும் லட்டு விற்பனைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் ஒரு பக்தருக்கு இரண்டு முதல் நான்கு லட்டுகள் வரை கூடுதலாக வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் லட்டு பிரசாதத்தை சிலர் அடுத்தடுத்த கவுண்டர்களில் திரும்பத் திரும்ப பெற்று புரோக்கர்கள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

இதனால் இனி ஆதார் கார்டு காண்பித்தால் மட்டுமே ஒரு பக்தருக்கு இலவசமாக ஒரு லட்டும், கூடுதலாக லட்டு வேண்டும் என்றால் ரூ. 50 என இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு இலவச லட்டு மற்றும் கூடுதலாக 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என கட்டுப்பாடு விதித்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து