Idhayam Matrimony

மன்னிப்பு கேட்ட நெதன்யாகு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2024      உலகம்
Netanyahu-(Israeli)

Source: provided

டெல் அவிவ் : காசாவில் ஆறு பிணைக்கைதிகளை உயிருடன் மீட்க முடியாததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்.,7 அன்று தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரைக் கொலை செய்தனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர், பிணைக்கைதிகள் 6 பேரை கொன்றனர். அவர்களின் உடல்களை சுரங்கத்தில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் மீட்டது. இதனால், இஸ்ரேல் மக்கள் அந்நாட்டின் பல நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நெதன்யாகு அரசு, பிணைக்கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில் நிருபர்களை சந்தித்த பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: பிணைக்கைதிகளை உயிருடன் மீட்க முடியாததற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். அவர்களை நாங்கள் நெருங்கியும் மீட்க முடியவில்லை. இதற்காக ஹமாஸ் அமைப்பினர் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து