எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாய் : ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 11-ம் தேதி...
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி. தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாவது எடிசன் லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளது. போட்டி ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறும். தேவைப்பட்டால், ரிசர்வ் நாளான ஜூன் 16 ஆம் தேதி பயன்படுத்திக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2-வது முறை....
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதல் முறையாக லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. முதல் முறையாக ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சௌத்தாம்டனிலும், இரண்டாவது முறை ஓவலிலும் நடத்தப்பட்டது. இரண்டு முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி, முதல் முறை நியூசிலாந்திடமும் இரண்டாவது முறை ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியடைந்தது.
லார்ட்ஸ் மைதானத்தில்....
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் தங்களுக்குள் மோதிக்கொள்ள உள்ளன. தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். தரவரிசையில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் போன்ற அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |