எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை : போலீஸ் அக்கா திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு கல்லூரியில் வேலை பார்த்த தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும் அரங்கேறியது.
இப்படி தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் பெண்கள், மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை தடுப்பது தொடர்பாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் மாவட்ட கலெக்டர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர்கள், போலீசார், கல்லூரி முதல்வர்கள் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர். அதில் முக்கியமாக கோவை மாநகர போலீசார் தாங்கள் செயல்படுத்தி வரும் போலீஸ் அக்கா திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், அது மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாகவும் மாநகர போலீஸ் சார்பில் அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கோவையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதால், இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது. கோவையில் கல்லூரி மாணவிகளிடம் வரவேற்பை பெற்ற போலீஸ் அக்கா திட்டம் பற்றிய விவரம் வருமாறு:-
கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உளவியல், பாலியல் ரீதியாக என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்களால் பெற்றோரிடமோ, கல்லூரி நிர்வாகம் என யாரிடமும் சொல்ல முடிவதில்லை. தயக்கத்தால் அதனை சொல்லாமல் தங்கள் மனதுக்குள்ளேயே போட்டு மூடி மறைத்து கொள்கின்றனர்.
இதனால் சில நேரங்களில் சிலர் தவறான முடிவுகளை எடுப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். அப்படி மாணவிகள் எந்த தவறான முடிவையும் எடுக்காமல் இருக்கவும், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டு தெரிவிப்பதற்காகவும் தொடங்கப்பட்டது தான் போலீஸ் அக்கா திட்டம்.இந்த திட்டமானது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் பாலகிருஷ்ணன் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார்.
விரைவில் தமிழகம் முழுவதும் போலீஸ் அக்கா திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த திட்டம் வருவதன் மூலம் மாணவிகள் தாங்கள் சொல்ல முடியாத பிரச்சினைகளை கூட போலீஸ் அக்காவிடம் தெரிவித்து தீர்வு காணமுடியும். இதேபோல் கல்லூரி மாணவர்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் போலீஸ் புரோ திட்டமும் கோவை மாநகரில் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |