Idhayam Matrimony

அடுத்தடுத்து சிக்கல்: செபி தலைவர் மாதவி மீது நிதியமைச்சகத்திடம் புகார்

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2024      இந்தியா
Madhavi 2024-09-04

Source: provided

மும்பை : செபி தலைவர் மாதவி புரி புச் மீது அந்த அமைப்பில் பணிபுரியும் ஊழியர்கள் மத்திய நிதியமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இந்தியப் பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (செபி) பணிபுரியும் ஊழியர்கள் நிதி அமைச்சகத்துக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில், ஊழியர்களிடம் கடுமையான வார்த்தையை மாதவி புச் பயன்படுத்துவதாகவும், எட்ட முடியாத இலக்குகளை நிர்ணயம் செய்து பணி செய்யவிடாமல் தொல்லை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதியே செபி அதிகாரிகளால் நிதியமைச்சகத்துக்கு இந்த புகார் அனுப்பப்பட்ட நிலையில், அதானி விவகாரத்தை தொடர்ந்து, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. செபி ஊழியர்களுக்கு மரியாதை குறைபாடு என்ற தலைப்பில் செபியின் ஊழியர்கள் கையெழுத்திட்டு மாதவி புச் மீதான புகாரை நிதி அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த புகார் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: செபியின் தலைவர் மாதவி புரி புச், கடுமையான மற்றும் தொழில்முறையற்ற வார்த்தைகளால் ஊழியர்களிடம் பேசுகிறார். ஒவ்வொரு நிமிடமும் என்ன செய்கிறோம் எனக் கண்காணிப்பதுடன், அடைய முடியாத இலக்குகளை நிர்ணயம் செய்கிறார். இது மனநலனை பாதிப்பது மட்டுமின்றி வேலை - வாழ்க்கை சமநிலையை இழக்கச் செய்துள்ளது.

பணியாளர்கள் ரோபோக்கள் அல்ல, அளவுக்கு மீறிய இலக்குகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. நிர்வாக அமைப்பை மாற்றி, பிற்போக்குத்தனமான கொள்கைகளை கொண்டு வந்துள்ளனர். மிகவும் உயர்நிலையில் உள்ள அதிகாரிகள், ஊழியர்களை மிகச் சாதாரணமாக கடும் சொற்களை பயன்படுத்துகிறார்கள்.

மூத்த நிர்வாகிகளிடம் இருந்து எவ்வித பாதுகாப்பும் இல்லை. பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு பயந்து பலரும் குரல் எழுப்ப மறுக்கின்றனர். அவநம்பிக்கை மற்றும் பயமானது கடந்த 2 - 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கடுமையான மற்றும் தொழில்முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி ஊழியர்களை அடிப்பணிய வைக்கும் இந்த தலைமைத்துவ முறை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து