எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் பருவமழை பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 3 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்குவது வழக்கம். போதுமான அளவுக்கு மழைப்பொழிவை கொடுக்கக்கூடிய இந்த பருவமழையின்போது வெள்ள பாதிப்புகளும் ஏற்படுவது உண்டு. எனவே பருவமழைக்கு முன்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அரசு துறைகள் இணைந்து பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்.
அதே போல் இந்த ஆண்டும் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கான ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷ னர் குமரகுருபரன், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, பரந்தாமன், கருணாநிதி, அரவிந்த் ரமேஷ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கார்த்திகேயன், சித்திக், மண்டல அலுவலர்கள், குடிநீர் வாரியம், மெட்ரோ ரெயில், நீர்வளத்துறை, மின்வாரியம், பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை, நீர் வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி எடுத்து கூறினார்கள். பருவமழையின்போது சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. அதுபோன்ற நிலை இந்த முறை வரக்கூடாது என்று எடுத்துரைத்தனர்.
சென்னையில் பல பகுதிகளில் நடக்கும் மழை நீர் கால்வாய் பணிகளை இந்த மாதத்துக்குள் முடிக்க கேட்டுக் கொண்டனர். மேலும் அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு, கேப்டன் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இந்த பணிகள் தற்போது தொடங்கி இருந்தாலும் அதை விரைவுபடுத்தி பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும். மழை நீர் எளிதாக செல்லும் வகையில் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
ஏற்கனவே கடந்த மாதம் 16-ந்தேதி நடந்த பருவமழை பாதிப்பு முன் எச்சரிக்கை ஆய்வு கூட்டத்தின்போது சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு தடுக்க வலியுறுத்தினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025