எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் அரினா சபலென்கா, எம்மா நவரோ நாளை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான எம்மா நவரோ (அமெரிக்கா) - பாலா படோசா (ஸ்பெயின்) உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எம்மா நவரோ 6-2, 7-5 என்ற செட் கணக்கில் பாலா படோசாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதே தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) - கின்வென் ஜெங் (சீனா) உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கின்வென் ஜெங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா - எம்மா நவரோ மோத உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |