Idhayam Matrimony

ARM விமர்சனம்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      சினிமா
ARM-review 2024-03-10

Source: provided

அரசாங்க பணிக்காக தேர்வு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கும் நாயகன் டோவினோ தாமஸ். அவரது தாத்தா, ஊர் கோவிலில் இருக்கும் பழம்பெரும் அதிசய விளக்கை திருட முயன்றதால், அவரையும் ஊர் மக்கள் திருடனாகவே பார்த்து அவ்வபோது அவமானப்படுத்துகிறார்கள்.

இதற்கிடையே, அதிசய விளக்கு பற்றி ஆவணப்படம் எடுக்க அந்த ஊருக்கு வரும் ஹரிஷ் உத்தமன் அந்த விளக்கை திருட திட்டம் போடுவதோடு, அதை டோவினோ தாமஸ் மூலமாகவே செய்யவும் முயற்சிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை சிறப்பான மேக்கிங் மூலம் மிக சுவாரஸ்யமாக சொல்வதே ‘ஏ.ஆர்.எம்’ 1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் பயணிக்கும் கதையை ஃபேண்டஸி ஜானரில் சொன்னது மட்டும் இன்றி, சமத்துவத்தை வலியுறுத்தும் படைப்பாகவும் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜிதின் லால்.

அறிமுக இயக்குநர் ஜிதின்லால், ஒரு சிலையை வைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விடுவதோடு, பாட்டி கதை சொல்ல ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே நம்மை கதைக்குள் பயணிக்க வைத்துவிடுகிறார்.

கதை சொல்லல் மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நம்மை இருக்கையில் கட்டுப்போட்டு விடும் இயக்குநர், படத்தின் சில இடங்களில் அரசியல் பேசினாலும், அதை அளவாக கையாண்டு அனைத்து மக்களையும் ரசிக்க வைத்து மகிழ்விக்க வைத்ததில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘ஏ.ஆர்.எம்’ மக்கள் மனதில் வெல்லும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து