Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      தமிழகம்
CM-RN 2023-12-17

Source: provided

சென்னை : பிரதமர் மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தமிழ்நாட்டு மக்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். 

அவரது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தவல்ல தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. 

நெடுஞ்சாலைகள், ரெயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது. 

சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம், மலேசியாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கை, ஆண்டுதோறும் காசி தமிழ்ச்சங்கமம், செளராஷ்டிர தமிழ்ச்சங்கமம், நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவியது ஆகியவை தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன.  தேசத்துக்கு அவரது தொலைநோக்குத் தலைமை என்றும் தொடர நமது பிரார்த்தனைகள். இவ்வாறு கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். 

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் என்று  தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலம், மகிழ்ச்சி, வலிமை ஆகியவற்றுடன் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து