முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் தனது பிறந்த நாளை கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்: வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்து

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      உலகம்
Sunita-Williams-2024-09-19

நியூயார்க், சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் நேற்று  தனது பிறந்த நாளை கொண்டாடினார்.  அவருக்கு நெட்டிசன்கள் பலரும்  வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். 

சுமார் ஒரு வார காலம் அவர்களது பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் சுமார் நூறு நாட்களை கடந்தும் பூமி திரும்பாமல் அவர்கள் அங்கேயே உள்ளனர்.  அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு அதற்கு காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் அவர்கள் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது. 

 இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். 

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸுக்கு இது இரண்டாவது பிறந்த நாள்: இதற்கு முன்பு கடந்த 2012-ல் விண்வெளி பயணம் மேற்கொண்ட போது தனது பிறந்தநாளை சுனிதா வில்லியம்ஸ் அங்கு கொண்டாடி இருந்தார். 2012-ல் ஜூலை 14 முதல் நவம்பர் 18 வரையில் சர்வதேச விண்வெளி மையத்தில் அவர் இருந்தார். தற்போது இரண்டாவது முறையாக அங்கு பிறந்தநாள் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.  அவருக்கு சமூக வலைதள பயனர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து