Idhayam Matrimony

காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் அனைத்து சக்திகளையும் தோற்கடிக்க வேண்டும்: பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      உலகம்
Modi-2024-09-19

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் அனைத்து சக்திகளையும் தோற்கடிக்க வேண்டும்  என்று ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர்  மோடி பேசினார்.  

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 

 ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தின் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.  முதன்முறையாக இந்த வாக்குப்பதிவு பயங்கரவாதத்தின் நிழல் இல்லாமல் நடந்துள்ளது. இவ்வளவு பெரிய அளவில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வாக்களித்தது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் வந்த போது, ​​ஜம்மு காஷ்மீரின் அழிவுக்கு மூன்று குடும்பங்கள்தான் காரணம் என்று கூறியிருந்தேன். அப்போதிருந்து, டெல்லி முதல் ஸ்ரீநகர் வரை, அந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பீதியில் உள்ளனர். 

 எப்படியாவது நாற்காலியைப் பிடித்து உங்கள் அனைவரையும் கொள்ளையடிப்பது அவர்களின் பிறப்பு உரிமை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மக்களின் நியாயமான உரிமைகளைப் பறிப்பதே அவர்களின் அரசியல் செயல்திட்டம்.

ஜம்மு காஷ்மீருக்கு பயத்தையும், அராஜகத்தையும் மட்டுமே அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இனி ஜம்மு காஷ்மீர் இந்த மூன்று குடும்பங்களின் பிடியில் இருக்காது. ஜம்மு காஷ்மீரை தீவிரவாதத்தில் இருந்து விடுவிக்க, ஜம்மு காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் அனைத்து சக்திகளையும் தோற்கடிக்க வேண்டும்.

இந்த 3 குடும்பங்களால் நமது தலைமுறை அழிய விட மாட்டேன். இங்கு அமைதியை நிலைநாட்ட மனப்பூர்வமாக செயல்பட்டு வருகிறேன்.  தற்போது ஜம்மு காஷ்மீர் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சீராக இயங்குகின்றன. 

குழந்தைகளின் கைகளில் பேனா, புத்தகங்கள், மடிக்கணினிகள் உள்ளன.  பள்ளிகளில் தீ விபத்து பற்றிய செய்திகள் இல்லை. மாறாக, புதிய பள்ளிகள், புதிய கல்லூரிகள், எய்ம்ஸ், மருத்துவக் கல்லூரிகள், ஐ.ஐ.டி. போன்ற செய்திகளை அதிகம் கேட்க முடிகிறது.

இந்த மூன்று குடும்பங்களும் ஜம்மு காஷ்மீர் அரசியலை தங்கள் சொத்தாகக் கருதுகின்றனர். தங்கள் குடும்பத்தைத் தவிர, வேறு யாரையும் முன்னேற அனுமதிக்க மாட்டார்கள். அவர்களின் சுயநலத்தின் விளைவுதான் இங்குள்ள இளைஞர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கினர். வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் இந்த மூன்று குடும்பங்கள்தான் வரவேண்டும் என எண்ணினர்.

முந்தைய சூழ்நிலைகளுடன் ஒப்பிடும்போது இப்போது நிலைமை மாறிவிட்டது.  

நமது காஷ்மீரி பண்டிதர்கள் காஷ்மீரியத்தை வளர்ப்பதிலும் முன்னேற்றுவதிலும் பெரும் பங்காற்றியுள்ளனர். ஆனால் மூன்று குடும்பங்களின் சுயநல அரசியல், காஷ்மீரி இந்துக்களை வீடற்றவர்களாக ஆக்கியது. நமது சீக்கிய குடும்பங்களும் ஒடுக்கப்பட்டன. 

காஷ்மீரி இந்துக்கள் மற்றும் சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒவ்வொரு அட்டூழியத்திலும் இந்த மூன்று குடும்பங்களும் பங்கு பெற்றிருந்தன. காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி - மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை மட்டுமே பிரிவினையை உருவாக்கின. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து