முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 890 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      தமிழகம்
bus-2022 08 25

சென்னை, வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் 890 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இது குறித்துதமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வார விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 260 பேருந்துகளும், நாளை 21-ம் தேதி (சனிக்கிழமை) 260 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 20-ம் தேதி வெள்ளிக்கிழமை 65 பேருந்துகளும் நாளை 21-ம் தேதி சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

விழுப்புரம், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு மாதவரத்தில் இருந்து இன்று 20-ம் தேதி 20 பேருந்துகளும், நாளை 21-ம்  தேதி 20 பஸ்களும் என சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து