முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் துணை நடிகை மீனா கைது

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      தமிழகம்
Meena 2024-11-09

சென்னை, டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள துணை நடிகை மீனா சென்னையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னையில், தொடர்ச்சியாக அதி நவீன விலை உயர்ந்த போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ராயப்பேடை அருகே பொதைப்பொருள் விற்பனை செய்த நபர் ஒருவரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடன் சேர்ந்து பெண் ஒருவரும் இந்த விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை நேற்று போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் மீனா என்பதும், அவர் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக இருந்து வருவதும், தொடர்ச்சியாக இப்பகுதியில் இதே போன்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இவருக்கு பின்புலத்தில் உள்ளது யார், இவர் யாரிடம் இருந்து இந்த மெத்தபெட்டமைன் போதைப்பொருளை வாங்குகிறார் என்பது குறித்த தகவல் விரைவில் தெரிய வரும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை மீனா, டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து