Idhayam Matrimony

முன்கூட்டியே பேஜர்களை வெடிக்க வைத்த இஸ்ரேல்? வெளியான தகவலால் அதிர்ச்சி

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      உலகம்
Lebanon 2024-03-18

டெல்அவிவ், லெபனானில், ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தி வந்த ஆயிரக்கணக்கான பேஜர்களை செவ்வாயன்று மதியம் ஒரே நேரத்தில் வெடிக்க வைத்து, இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், ஈரானிய அமைப்பு, இந்த சதித் திட்டம் குறித்து கண்டுபிடித்ததால், திட்டமிட்டதைவிட முன்கூட்டியே பேஜர்கள் வெடிக்க வைக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான இந்த தாக்குதல் திட்டத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அனுமதி கொடுத்திருக்கலாம் என்றும், நியூ யார்க் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது. ஏஆர்-924 என்ற வகை பேஜர்கள்தான் வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. இது தைவான் நிறுவமான கோல்டு அப்பல்லோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. செவ்வாயன்று ஒரே நேரத்தில் பேஜா்கள் வெடித்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதனைத்தொடா்ந்து புதன்கிழமை லெபனானில் வாக்கி டாக்கிகள் வெடித்து 9 போ் உயிரிழந்தனர்.

லெபனானில் ‘பேஜா்’ தொலைத்தொடா்பு சாதனங்களை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானவா்கள் காயமடைந்து, 12 போ் உயிரிழந்த மறுநாளே, வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி சக்தி சேமிப்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் 9 போ் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

முன்னதாக, லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் சாதனங்கள் செவ்வாய்க்கிழமை திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்; சுமார் 2,750 போ் காயமடைந்தனா். அவா்களில் 460 பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தில் இருக்கும் சூழலில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், அந்த நாடுதான் இத்தகைய உயா் தொழில்நுட்பத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து