எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : ஆண்டுதோறும் பாதுகாப்பற்ற உணவால் 60 கோடி பேர் பாதிக்கப்படுவதாகவும், பாதுகாப்பற்ற உணவால் உயிரிழப்பவர்களில் 70 சதவீதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.
டெல்லியில் நடைபெறும் இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் வீடியோ செய்தி வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது:-
பருவநிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம், புதிய தொழில்நுட்பங்கள், உலகமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் ஆகிய காரணங்களால் நமது உணவு முறைகளுக்கான சவால்கள் அதிகரித்துள்ளன. பாதுகாப்பற்ற உணவுகளால் ஆண்டுதோறும் 60 கோடி மக்கள் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். 4.20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பாதுகாப்பற்ற உணவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் 70 சதவீதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.
உலக அளவில் உள்ள இந்த சவால்களை எதிர்கொள்வதில் உணவு கட்டுப்பாட்டு சமூகம் முக்கிய பங்கு வகிக்கிறது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சத்தான உணவை வாங்கி சாப்பிட முடியாத நிலையில் உள்ளனர். எனவே, இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம். அனைவருக்கும் பாதுகாப்பான உணவு மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டு நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, உணவுத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025