முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தின விழாவில் பங்கேற்க பழங்குடியின குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      இந்தியா
Murmu 2023-11-19

Source: provided

ராய்ப்பூர்: குடியரசு தின விழாவில் பங்கேற்க ‘பைகா’ பழங்குடியின குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.;

சத்தீஷ்கர் மாநிலம் கவர்தா பகுதியில் 'பைகா' பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், பைகா பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் பலர் இன்றுவரை அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக சத்தீஷ்காரில் உள்ள பைகா பழங்குடியினத்தை சேர்ந்த 3 குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் 'பைகா' பழங்குடியின குடும்பத்தினர், ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் உணவருந்த உள்ளனர். பின்னர் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி இல்லம் உள்ளிட்ட இடங்களை இவர்கள் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து