முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்ரிநாத் கோவில் மே 4-ம் தேதி திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 2 பெப்ரவரி 2025      இந்தியா
badrinath

Source: provided

நியூ தெஹ்ரி: பத்ரிநாத் கோவில் நடை இந்த ஆண்டு மே 4-ம் தேதி   திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இமயமலை பகுதியில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்கள் சார் தாம்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்களின் புனித தலங்களான இந்த கோவில்களுக்கு செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை எனப்படுகிறது.

ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று தரிசிக்க முடியும். குளிர்காலத்தில் 6 மாதங்கள் நடை சாத்தப்படும். கோவில்களுக்கு செல்லும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும். குளிர்காலம் முடிந்து ஏப்ரல்-மே மாதங்களில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

அவ்வகையில், இந்த ஆண்டு மே 4-ம் தேதி காலை 6 மணிக்கு பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வசந்த பஞ்சமியை முன்னிட்டு நரேந்திர நகர் அரண்மனையில் இன்று நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பிறகு கோவில் நடை திறக்கப்படும் தேதி மற்றும் நேரம் முடிவு செய்யப்பட்டது.

சிறப்பு பூஜையில் தெஹ்ரியின் முன்னாள் மன்னர் மன்வேந்திர ஷா, அவரது மனைவி, மகள், தெஹ்ரி மக்களவை உறுப்பினர் மாலா ராஜ்ய லட்சுமி ஷா, பத்ரிநாத் தமை பூசாரி ராவல் அமர்நாத் நம்பூதிரி, பத்ரிநாத் கேதார்நாத் கோவில் கமிட்டி தலைமை நிர்வாகி விஜய் தப்லியாள் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆறு மாத காலம் நடைபெறும் சார் தாம் யாத்திரையின் போது, நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து