முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். நடைபெறும் மைதானங்கள்: மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ. திடீர் அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : ஐ.பி.எல். போட்டி நடைபெறும் மைதானங்களை எந்தவிதமான மற்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.

ஐ.பி.எல். தொடர்...

ஐ.பி.எல்.  2025 சீசன் அடுத்த மாதம் 21-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடருக்கான முழு அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. தற்போது ஐ.பி.எல்.  போட்டிகள் நடைபெறும் பல மைதானங்களில் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

பி.சி.சி.ஐ. அறிவுரை... 

இந்த நிலையில் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ.  ஒரு வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில் ஐ.பி.எல்.  தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, ஐ.பி.எல். அணிகள் போட்டி நடைபெற இருக்கும் மைதானங்களை எந்தவிதமான மற்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. பவுண்டரி லைன் அருகே நிகழ்ச்சி  நடத்தும்போது மைதானம் போட்டி நடத்துவதற்கு ஏற்ப தரத்தில் இருப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற காரணத்தினால் பி.சி.சி.ஐ.  இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

சொந்த மைதானம்...

ஐ.பி.எல்.  கிரிக்கெட்டில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 10 அணிகளும் குறிப்பிட்ட மைதானங்களை தங்களுடைய சொந்த மைதானங்களை கருதும். சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்தையும், மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானத்தையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடன கார்டன் மைதானத்தையும் சொந்த மைதானங்களாக கொண்டு விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து