முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 லட்சம் குடும்பங்களுக்கு பழச்செடித் தொகுப்புகள் : வேளாண் பட்ஜெட்டில் தகவல்

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      தமிழகம்
MRK-2-2025-03-15

Source: provided

சென்னை : பப்பாளி, கொய்யா, எலுமிச்சை செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவிகிதத்தில் மானிய விலையில் வழங்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று (மார்ச்.15) தாக்கல் செய்தார்.

முன்னதாக, சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில்,

9 லட்சம் குடும்பங்களுக்கு பழச்செடித் தொகுப்புகள்

2025-2026 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டம் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

9 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவிகிதம் மானியத்தில் பழச்செடித் தொகுப்புகள் வழங்கப்படும்.

1 லட்சம் இல்லங்களுக்கு 17 சதவிகிதம் மானியத்தில், பயறுவகை விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

5 காளான் உற்பத்தி கூடங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும்.

15 லட்சம் குடும்பங்களுக்கு காய்கறி விதைகள் தொகுப்புகள்

6 வகையான காய்கறிகள் விதைகள் அடங்கிய தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படும்.

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் எனும் புதிய திட்டம் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

360 நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவும் திட்டம்

ஊரகப்பகுதியில் உள்ள ஏழை மகளிருக்கு நாட்டுக் கோழிப்பண்களை அமைப்பதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கான நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து