முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சன்ரைசர்ஸ் அணியில் இணைகிறார் நிதீஷ் ரெட்டி

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      விளையாட்டு
Nitish-Reddy 2025-03-15

Source: provided

ஹைதராபாத் : பிரபல ஆல்ரவுண்டர் நிதீஷ் ரெட்டி சன்ரைசர்ஸ் அணியில் இணைய தயாராக இருக்கிறார்.

ஐ.பி.எல்.  தொடர்...

கடந்த ஐ.பி.எல்.  தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட்டிங், பந்துவீச்சு என அசத்தியவர் நிதீஷ் குமார் ரெட்டி. இவரது சிறப்பான செயல்பாட்டினால் பார்டர்-கவாஸ்கர் தொடரிலும் அறிமுகமாகினார். பி.ஜி.டி. தொடரில் சதமடித்து அசத்தினார். தொடர் முழுவதும் சிறப்பான பேட்டிங்கின் மூலம் கவனம் ஈர்த்தார்.

காயம்... 

ஜனவரி முதல் காயம் காரணமாக என்.சி.ஏ. வில் இருந்தார் நிதீஷ் ரெட்டி தற்போது முழுமையான உடல் தகுதி பெற்றதாக பி.டி.ஐ.  செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்டுகளும் நிதீஷ் ரெட்டி விளையாடலாம் எனக் கூறியுள்ளார்கள். மேலும் உடல்தகுதியை நிரூபிக்கும் யோ-யோ சோதனையிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளார். விரைவில் அணியுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முதல் மோதல்...

21 வயதாகும் நிதீஷ் ரெட்டி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வெளியேறினார். கடந்த ஐ.பி.எல்.  தொடரில் 13 போட்டிகளில் 303 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 143ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் அணி மார்ச்.23ஆம் தேதி ஹைதராபாத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த அணிக்கு கேப்டனாக ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் இருக்கிறார். கடந்தமுறை இறுதிப் போட்டியில் தோல்வியுற்றனர். நடப்பு ஐ.பி.எல்.  தொடரில் வெளிநாட்டு கேப்டனாக இருப்பவர் இவர் மட்டுமே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து