முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்கள் இருவருக்கு அமைச்சர் பதவி

ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2025      உலகம்
Canada 2025-03-16

Source: provided

ஓஸ்லா : கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் இந்திய வம்சாவளிப் பெண்கள் இருவருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மீது பொதுமக்களுக்கும், ஆளும் லிபரல் கட்சியினருக்கும் அதிருப்தி அதிகரித்தது. இதனால் அவா் லிபரல் கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா். இந்த நிலையில், கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும், அரசியல் அனுபவமே இல்லாதவருமான மாா்க் காா்னி (59) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

டெல்லியில் பிறந்தவரான கமல் கேரா (36) கனடா நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளம் வயது உறுப்பினர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரைப் போலவே இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்துக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 58 வயதாகும் அனிதா ஆனந்த் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில் துறைகளுக்கான அமைச்சராக உள்ளார்.

இவர்கள் இருவருமே முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பதவி வகித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கனடாவில் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் 13 ஆண்கள், 11 பெண்கள் அமைச்சர்களாகப் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து