முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூா்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      விளையாட்டு
Rajasthan 2025-03-31

Source: provided

ஐ.பி.எல். போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவா்களில் 209/4 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 15.5 ஓவா்களில் 212/2 ரன்கள் எடுத்து வென்றது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தானின் 14 வயது வீரா் வைபவ் சூா்யவன்ஷி, நடப்பு சீசனில் அதிவேக சதம் விளாசி சாதனைப் படைத்தாா். இந்தச் சிறுவனுக்கு பலரும் வாழ்த்துகளை குவித்துவரும் நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து ரூ.10 லட்சம் பரிசுத் தொகையையும் அளித்துள்ளார். 

இந்தப் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியதாவது: ஐ.பி.எல். வரலாற்றில் 14 வயதில் சதமடித்த பிகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துகள். கடின உழைப்பு, திறமையினால் இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக மாறியுள்ளார். அனைவரும் இவரை நினைத்து பெருமைப்படுகிறார்கள். பீகார் அரசு சார்பில் இந்த இளம் பீகார் வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அளிக்கிறேன். வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்கு புதிய சாதனைகளை நிகழ்த்தவும் இந்திய நாட்டிற்கு புகழைச் சேர்க்கவும் வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

__________________________________________________________________________________________________________________________________

சூா்யவன்ஷி  தந்தை நெகிழ்ச்சி

ஐ.பி.எல். போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவா்களில் 209/4 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 15.5 ஓவா்களில் 212/2 ரன்கள் எடுத்து வென்றது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தானின் 14 வயது வீரா் வைபவ் சூா்யவன்ஷி, நடப்பு சீசனில் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தாா். ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இது 2-ஆவது அதிவேக சதமாகும். முன்னதாக பெங்களூரு வீரா் கிறிஸ் கெயில் 2013-இல் புணே வாரியா்ஸுக்கு எதிராக 30 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளாா்.

இந்நிலையில் இவரது தந்தை அளித்த பேட்டியில் கூறியதாவது: கடைசி 3-4 மாதங்களாக சூர்யவன்ஷிக்கு விரிவாக பயிற்சியளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் மெருகேற்றியதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட், உதவி பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள். வைபவ் சூர்யவன்ஷி மிகவும் கடினமாக உழைத்தான். அதன் பலன்தான் இந்த சதம் என்றார்.  வைபவ் சூர்யவன்ஷியின் விளையாட்டு பயிற்சிக்காக தங்களது விவசாய நிலத்தை விற்று, செய்யும் தொழிலையும் விட்டு மகனுக்காக போராடியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து