முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் தவறுதான்: கர்நாடக முதல்வர் திட்டவட்டம்

புதன்கிழமை, 30 ஏப்ரல் 2025      இந்தியா
Siddaramaiah 2023 04 16

பெங்களூரு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகத்திற்கு சமம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில் கடந்த 27ம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆட்டத்தின்போது மைதானத்தில் ஒருநபர் 'பாகிஸ்தான் வாழ்க' என கோஷம் எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் அந்த நபர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். கற்கள், கட்டைகளை கொண்டு அந்த நபரை சரமாரியாக அடித்தனர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சின் என்ற நபர் உள்பட 20 பேரை கைது செய்தனர். மேலும், 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் உயிரிழந்தது கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புல்பல்லி கிராமத்தை சேர்ந்த அஷ்ரப் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பிய நபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சித்தராமையா கூறுகையில், குடுபு கிராமத்தில் நபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் வாழ்க என கோஷம் எழுப்பப்பட்டிருந்தால் யாராக இருந்தாலும் அது மிகவும் தவறான ஒன்று. பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் தவறு. அவ்வாறு பேசுவது தேச துரோகத்திற்கு சமம்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து