முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசில் இருந்து விலக மனதளவில் தயார்: திரிணாமுல்

புதன்கிழமை, 20 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூன். - 20 - மத்திய அரசில் இருந்து வெளியேற மனதளவில் தயாராக இருக்கிறோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற கட்சி தலைவர் பந்தோபாத்யாய தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை மீண்டும் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி முயன்று வந்தார். இந்த நிலையில் கலாம் வெளியிட்ட அறிக்கையில் தாம் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதையடுத்து திரிணாமுல், காங்கிரஸ் கட்சியினரின் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. அப்போது மத்திய அமைச்சரவையில் உள்ள திரிணாமுல் கட்சி அமைச்சர்கள் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை மம்தாவிடம் அளிப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இரண்டு மணி நேரம் நீடித்த இக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மத்திய அரசில் இருந்து நாமாக வெளியேறினால் இந்த அரசை கவிழ்ப்பதற்காகத்தான் அப்படி செய்தோம் என்று மக்களிடையே தவறாக பிரச்சாரம் செய்யப்படும் என்றார்.  இக்கூட்டம் குறித்து சுதீப் பந்தோபாத்யாய கூறும் போது, திரிணாமுல் கட்சியை சேர்ந்த மத்திய ரயில்வே அமைச்சரும், இணை அமைச்சராக உள்ள ஆறு பேரும் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை மம்தாவிடம் தந்தனர் என்று கூறப்படுவது தவறு. இந்த அரசை பலவீனப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. இது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கிளப்பி விடப்பட்ட செய்தி. காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் ஒரு பாரமாக இருப்பதாக அவர்கள் நினைத்தார்களானால் எங்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மத்திய அரசில் இருந்து விலக மனதளவில் தயாராக இருக்கிறோம். ராஜினாமா செய்ய எங்களுக்கு ஒரு விநாடி கூட ஆகாது. எங்களை பதவியில் தொடரும்படி யாரும் வற்புறுத்த முடியாது. மறைமுகமாக எங்களுக்கு மிரட்டல் விடுக்க முடியாது. எங்கள் தலைவர் மம்தா கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவோம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்