முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பாக்., தயாராக உள்ளதாம்

வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூலை 13 - இரு நாட்டு பிரச்சினைகளுக்கு  தீர்வுகாண தங்கள் நாடு தயாராக உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் கூறியுள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்  கூறுகையில்,  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே  உள்ள  இரு தரப்பு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவே பாகிஸ்தான் விரும்புகிறது என்றார்.

முக்கியமான பிரச்சினைகளில் சில பிரச்சினைகளுக்காவது  தீர்வு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்தும் கூட அவர் இதுவரை பாகிஸ்தான் வராதது  தங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறதா? என்று கேட்டதற்கு  தான் ஏமாற்றம் அடைவில்லை என்றும் அதுபோன்ற வார்த்தைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் இன்னமும் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்க தாங்கள்  தயாராக இருப்பதாகவும்  கர் கூறினார்.

மன்மோகன் சிங் தனது பதவிக்காலத்திற்குள் பாகிஸ்தானுக்கு வருகை தருவார்  என்று  தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே இரு நாட்டு பிரதமர்கள்  சந்திப்பை எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை.  இனி மேலாவது  இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும்  கர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்