முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதர்ஷ் ஊழல்: மகாராஷ்டிரா அரசு மீது சி.பி.ஐ. புகார்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2012      ஊழல்
Image Unavailable

 

மும்பை,ஜூலை.24 - ஆதர்ஷ் குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதில் மகாராஷ்டிர அரசுக்கு  தவறான வழி காட்டப்பட்டுவிட்டது என்று சி.பி.ஐ. கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. மும்பையில் முன்னாள் ராணுவ வீரர்கள், கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தார்கள் மற்றும் தியாகிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒதுக்காமல் உயரதிகாரிகள், மாநில அரசியல் தலைவர்களுக்கு வேண்டியவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் அசோக் சவாண் ராஜினாமா செய்தார். 

இந்தநிலையில் குடியிருப்புகளை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் 13 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சி.பி.ஐ. கடந்த ஜூலை 4-ம் தேதி 10 ஆயிரம் பக்க குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. அதில் ஆதர்ஷ் சொஷைட்டி செயலாளர் தாகூர் மற்றும் பலர் சேர்ந்த மகாராஷ்டிரா அரசுக்கு தவறான வழியை காட்டிவிட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மும்பையில் இருந்த ராணுவ அதிகாரிகளும் சம்மதித்துவிட்டனர். இந்த குற்றச்சாட்டை சி.பி.ஐ. கோர்ட்டு இன்று பதிவு செய்து கொள்ள இருக்கிறது. மும்பையின் தென்பகுதியில் ராணுவ வீரர்களின் பெண் குழந்தைகளுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி விடுதியை குடியிருப்புகளுக்காக ஒதுக்க ராணுவ அதிகாரிகள் சம்மதித்துவிட்டனர் என்று அப்போது முதல்வராக இருந்த விலாஸ் ராவ் தேஷ்முக்கிற்கு தாகூர் தவறான வழியை காட்டியுள்ளார் என்றும் அந்த குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. கூறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்