முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஊழல்: சுனில் மிட்டல் - ரவி ரூயா கோர்ட்டில் ஆஜர்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.12 ரூ.1.80 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.எம்.டி. சுனில் மித்ரா, எஸ்ஸார் குரூப் புரமோட்டர் ரவி ரூயா ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதில் மிட்டல் மற்றும் ரவி ரூயா ஆகியோர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. அப்படி இருந்தபோதிலும் அவர்கள் இருவரும் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. தனிகோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி சம்மன் அனுப்பினார். மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஹட்சியன் மேக்ஸ் டெலிகாம் பிரைவேட் லிமிடெட் முன்னாள் நிர்வாக இயக்குனர் அசிம் கோஷிக்கும் சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொலைதொடர்பு நிறுவனங்களான பாரதிய செல்லுலர் லிமிடெட், ஹட்சிசன் மேக்ஸ் டெலிகாம் பிரைவேட் லிமிடெட்( ஓடோபோன் இந்தியா லிமிட்டெட்) ஸ்டெர்லிங் செல்லுலர் லிமிட்டெட்(ஓடோபோன் மொபைல் லிமிடெட்) ஆகியவைகளுக்கும் கோர்ட்டு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிறுவனங்கள் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இந்த 3 கம்பெனிகளுக்கும் தொலைதொடர்புத்துறை அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.846 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்