முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்தாத்தில் 10 இடங்களில் கார் குண்டு வெடிப்பு: 40 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஜூன். 26 - ஈராக்கில் மைனாரிட்டியாக வாழும் ஷியா பிரிவினர் மீது மெஜாரிட்டியாக வாழும் சன்னி முஸ்லீம்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தலைநகர் பாக்தாத் மற்றும் அதனை சுற்றியுள்ள ஷியா பிரிவினர் பகுதிகளில் 10 இடங்களில் கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் அதிகமாக கூடும் மார்க்கெட்டுகள் மற்றும் கார் நிறுத்தும் இடங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் 40 பேர் உடல் சிதறி பலியாயினர். 125 பேர் காயமடைந்தனர். 

கார் குண்டு தாக்குதல்கள் நடந்த பகுதிகளில் உடல்கள் சிதறி கிடந்தன. ரத்தம் குளம் போல் பெருகி கிடந்தது. ஏராளமான கார்கள் தீயில் எரிந்தன. பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அப்பகுதியே போர்க்களம் போல் தோன்றியது. ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அமெரிக்க ராணுவம் 2011 ல் வெளியேறியது. மைனாரிட்டி பிரிவினரான ஷியாவை சேர்ந்த நூரு அல்மைய்தி பிரதமராக உள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெஜாரிட்டியாக வாழும் சன் பிரிவினர் ஷியா பிரிவினரை கொன்று குவித்து வருகின்றனர். கடந்த மே மாதம் மட்டும் ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்