முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரேவுக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் வாபஸ்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      ஊழல்
Image Unavailable

 

புனே, மே 7 - ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என கோரிவரும் அன்னா ஹசாரேவின் ஹிந்து ஸ்வராஜ் அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை புனே அறக்கட்டளை கமிஷனர் அலுவலகம் வாபஸ் பெற்றுக்கொண்டது. 

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி டெல்லியில் சமீபத்தில் அன்னா ஹசாரே என்ற சமூக சேவகர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு இவரது உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் அன்னாஹசாரே தலைமையிலான இந்து ஸ்வராஜ் அறக்கட்டளை கடந்த 2005 ஆம் ஆண்டுமுதல் 2007 ம் ஆண்டுவரை அறக்கட்டளையின் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அன்னா ஹசாரேவுக்கு புனேயில் உள்ள அறக்கட்டளை கமிஷனர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இந்த நோட்டீஸ் தவறுதலாக அனுப்பப்பட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அன்னா ஹசாரேவுக்கு அந்த அறக்கட்டளை கமிஷனர் அலுவலகம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. எழுத்தர் ஒருவர் ஏற்படுத்திய பிழையின் காரணமாக இந்த தவறு நடந்துள்ளது என்றும், இதற்காக தனது அலுவலகம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அன்னா ஹசாரேவுக்கு புனே அறக்கட்டளை கமிஷனர் அலுவலம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

ஊழலுக்கு எதிராக போராடும் அன்னாஹசாரேயின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இப்படி ஒரு நோட்டீசை புனே அறக்கட்டளை கமிஷனர் அலுவலகம் அனுப்பியிருக்கிறது என்று சில நாட்களுக்கு முன்பு ஹசாரேவின் வழக்கறிஞர் மிலிந்த் பவார் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்தே இந்த நோட்டீஸ் இப்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்