முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை ஓட்டுப்பதிவு: சென்னையில் போலீசார் உஷார்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 23 - தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை (24_ந் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது

தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சுமார் 1ஙூ லட்சம் போலீசாருடன் இணைந்து 15 ஆயிரத்துக்கும் அதிகமான துணை ராணுவ படையினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் <ஈடுபடுகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குசாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 500 வாக்குசாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய தேர்தலில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்கு சாவடிகள் மற்றும் மோதல் நடைபெற்ற இடங்களை கருத்தில் கொண்டு பதற்றமான வாக்கு சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன.

இந்த மையங்கள் அனைத்திலும் நாளை தேர்தல் நடைபெறும் போது துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் <ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவ படையினரும், வெளி மாநில போலீசாரும் பதற்றமான வாக்குசாவடியில் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப் படுகிறார்கள்.

மாநில அளவில் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கு சமீபத்தில் டி.ஜி.பி. அனுக் ஜெயஸ்வால் நியமிக்கப்பட்டார். தமிழக டி.ஜி.பி. ராமானுஜத்தை தேர்தல் பணியில் இருந்து விடுவித்துவிட்டு இவரை நியமித்தது. தேர்தல் பிரிவு அதிகாரி சேஷசாயி ஏற்கனவே பணியில் உள்ளார். இவர்கள் இருவரும் மாநிலம் முழுவதும் தேர்தலின் போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து இறுதிகட்ட ஆலோசனையில் <ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் சமயத்தில் மத ரீதியிலோ அல்லது சாதி அடைப்படையிலோ மோதல் ஏற்படலாம் என்று கருதப்படும் மாவட்டங்களில் கூடுதலாக அதிரடிப் படை போலீசாரை களத்தில் இறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விரைந்து செயல்படுவதற்காக 1400 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தங்களது பகுதிகளில் நடை பெறும் தேர்தல் விதிமுறைகள் குறித்து பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

சென்னையில் 3 தொகுதிகளிலும் தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்கு தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. இப்பிரிவில் சுமார் 50 போலீசார் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த 1 மாத காலமாக வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய 3 தொகுதிகளில் தேர்தலின் போது மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து முழு அளவில் ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் அடிப்படையில் நாளை காலை 6 மணியில் இருந்து அனைத்து வாக்கு சாவடி அருகிலும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் <ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

தேர்தலையொட்டி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் நியமிக்கப்பட்ட கமிஷனர் திரிபாதி 2 வாரங்களாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை நியமிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் புகார்களை கட்டுப்பாட்டு அறையில் உள்ள 28441707, 28441507, 28441807 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்