எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.24 - மக்களவைத் தேர்தலில் வாக்களிப்ப தற்காக நடிகர்கள் கமலஹாசன், விஜய், அ ஜீத், சூர்யா, உள்ளிட்டோர் தங்களது படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னக்கு வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே அனைவரும் தங்களது வாக்குகளை அளிக்க உள்ளனர். தமிழகத்தில் நடிகர்களில் பலர் வெளி ஊர்களில் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க விரும்பியதால் படப்பிடிப்பை ரத்து செய்துவி்ட்டு சென்னை வந்துள்ளனர். இ வர்களில் கமல், விஜய், அஜீத், சூர்யா ஆகியோர் முக்கியமானவர்கள். நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் அருகில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் வாக்களிக்கிறார்.
நடிகர் கமலஹாசன் பெங்களூரில் உத்தம வில்லன் படத்தில் பங்கேற்று நடித்து வந்தார். வாக்களிப்பதற்காக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் சென்னைக்கு வந்துள்ளார். இவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்கிறார். வாக்களித்த உடனேயே அவர் பெங்களூர் புறப்பட்டு சென்று விடுவார்.
இதுபோல் நடிகர் விஜய் கத்தி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தார். வாக்களிப்பதற்காக இவர் சென்னை வந்துள்ளார். அடையாறில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் இவர் வாக்களிக்க உள்ளார். நடிகர் சூர்ய அஞ்சான் படப்பிடிப்புக்காக மும்பையில் முகாமி்ட்டுள்ளார். கார்த்தியும் விளம்பர படத்துக்காக மும்பை சென்றுள்ளார். இவர்கள் இருவரும் வாக்களிப்பதற்காக சென்னை வந்துள்ளனர். தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் உள்ள வாக்குச் சாவடியில் இவர்கள் வாக்களிக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் சிவகுமார், நசிகை ஜோதிகா ஆகியோரும் வாக்களிக் கிறார்கள்.
நடிகர் அஜீத் திருவான்மியூர் குப்பம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது மனைவி ஷாலினியுடன் சென்று வாக்களிக்கிறார். நடிகர் விஷால் அண்ணா நகரில் தனது வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் வாக்களிக்கிறார். நடிகர் விக்ரம் பெசன்ட் நகரிலும், ஜெயம் ரவி பரத், ஆர்யா மற்றும் நடிகை திரிஷா ஆகியோரும் படப் பிடிப்பை ரத்து செய்துவிட்டு வாக்களிக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப