முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஸ்கர் - இ - தொய்பாவால் இந்தியாவுக்கு ஆபத்தா?

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன்,ஜூலை.3 - பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. 

தீவிரவாத அமைப்புகளும், அவற்றை ஒடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுதலும் என்ற நோக்கத்தில் தேசிய தீவிரவாத ஒழிப்பு அமைப்பை அமெரிக்கா ஏற்படுத்தி உள்ளது. அந்த அமைப்பு 19 பக்கங்களை கொண்ட ஒரு அறிக்கையை வெள்ளை மாளிகையில் முதன் முதலாக வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஸ்கர் இ தொய்பா அமைப்பு தெற்கு ஆசிய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு ஆசியாவில் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பால்தான் அச்சுறுத்தல் உள்ளது. மேலும் பாகிஸ்தானில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய சில தீவிரவாத அமைப்புகள் இன்னும் சில நாடுகளில் பரவியுள்ளன. அந்த அமைப்புகள் லஸ்கர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. அது பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்