முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் கைதான வைர வியாபாரிகள் தாயகம் திரும்பினர்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜன. - 7 - கடத்தல் குற்றச்சாட்டுக்களின்பேரில் சீனாவில் கைது செய்யப்பட்ட 22 இந்திய வைர வியாபாரிகளில் 12 பேர் நேற்று மும்பை திரும்பினர். சீன கோர்ட்டின் நாடு கடத்தும் உத்தரவுப்படி இவர்கள் விடுவிக்கப்பட்டு நேற்று தாயகம் திரும்பினர். இதுகுறித்து வைரக்கல் மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள் கவுன்சில் சேர்மன் ராஜீவ் ஜெயின் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சீனாவில் கைதான வைர வியாபாரிகளில் 12 பேர் இந்தியா திரும்பி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மீதியுள்ளவர்களையும் இந்தியாவிற்கு கொண்டுவர நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறோம் என்று தெரிவித்தார். சீனாவில் கைதான வியாபாரிகளில் பெரும்பாலானோர் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். சீன மார்க்கெட்டில் விற்பதற்காக ஹாங்காங்கில் இருந்து இவர்கள் சட்டவிரோதமாக வைரத்தை கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். தற்போது இவர்களில் 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்