முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் இந்திய தூதரகம் மீது தாக்குதல் குறித்து புதிய தகவல்

வியாழக்கிழமை, 5 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.6 - பிரதமராக நரேந்திர மோடி பதவி யேற்ற தருணத்தில், ஆப்கானிஸ்தானில் ஹெராத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு, தூதரக ஊழியர்களை பிணைக் கைதியாக பிடிக்கும் பொறுப்பு லஷ்கர் இ தொய் பாவின் தாக்குதல் படைக்கு வழங் கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ் தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளே காரணம் என்று ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய் கூறியது இதனை உறுதிப்படுத்துகிறது.

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் 3 நாள்களுக்கு முன் ஹெராத் நகரில் உள்ள இந்திய தூதகரத்தை லஷ்கர் தீவிர வாதிகள் தாக்கினர். நன்கு பயிற்சி அளித்து அனுப்பி வைக்கப் பட்ட இந்த தீவிரவாதிகள், பெரு மளவு ஆயுதங்களை பயன்படுத்தி யுள்ளனர். நான்கு தீவிரவாதிகளும் ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் தலா 6 தோட்டா உறைகள் வைத் திருந்தனர். இவர்களில் இருவர் எறிகுண்டு வீசும் ராக்கெட் லாஞ்சர்கள் கொண்டுவந்துள்ளனர்.

டூயல் சிம் மொபைல் போன்களை பயன்படுத்தியுள்ளனர். பி.பி.சி., ஏரியானா டி.வி. ஸ்டேஷன், இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் தொலைபேசி எண்கள் போன் களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. 8 மணி நேரத்துக்குப் பிறகே மோதல் முடிவுக்கு வந்தது. இதில் 1 தீவிரவாதி தப்பிவிட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்