எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக. 21–இன்பமும், துன்பமும் வாழ்க்கையின் இரு பக்கங்கள். வாழ்க்கை என்றால் அதில் தொல்லை இருக்கும்; கவலை இருக்கும்; இவற்றிக்கு இடையே இன்பமும் இருக்கும். அப்படி இருந்தால் தான், அந்த வாழ்க்கை முழுமையானதாக, சுவையானதாக, பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு தடங்கல்கள், பிரச்சனைகள் நமக்கு அந்த நேரத்தில் மிகப் பெரிய சுமையாக தெரியும். அதனை அப்படி நினைக்காமல், எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், அடுத்த பணியை தொடர்ந்து செய்ய ஏதுவாக இருக்கும் என்று மணமக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை கூறியுள்ளார்.;
. .
.அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர், வாரியத்தலைவர், தொழிற்சங்க பிரமுகர் உள்ளிட்ட அதிமுகவின் நிர்வா கிகள் 9 பேர் இல்ல திருமணங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று நடத்தி வைத்தார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மணவிழா பந்தலில் இந்த திருமணங்கள் நடைபெற்றன. முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு ஜோடி மணமக்களை மேடைக்கு வரவழைத்து, மணமகள் கையில் மங்கள நாணை எடுத்துக்கொடுத்தார். மங்கள நாண் அணிவிக்கப்பட்டதும் மலர்மாலைகளை கொடுத்து அவர்கள் மாலை மாற்றியதும்
அட்சதை தூவி வாழ்த்தினார். பின்னர் ஒவ்வொரு ஜோடி மணமக்களுக்கும் பரிசு பொருட்களை வாழ்த்து தெரிவித்தார்.
திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர், தனது அமைச்சரையும், சில வீரர்களையும் அழைத்துக் கொண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக மன்னரின் கூரிய போர்வாள், அவருடைய கையின் கட்டை விரலை துண்டித்தது. மிகுந்த வலியுடனும், வேதனையுடனும் இருந்த மன்னர், தன் விதியை நொந்து கொண்டார். அப்போது, அருகில் இருந்த அமைச்சர் எல்லாம் நன்மைக்கேஎன்றார்.
அமைச்சரின் இந்த வார்த்தையைக் கேட்ட உடன் மன்னருக்கு கோபம் வந்தது. தன்னுடைய வீரர்களை அழைத்து, அமைச்சரை கைது செய்யுங்கள்! விடியும் வரை சிறையில் அவரை, தலைகீழாக தொங்க விடுங்கள்! பின்னர் நாளை காலை தூக்கில் இடுங்கள்! என்று கட்டளையிட்டார்.
அமைச்சரை வீரர்கள் சிறைக்கு அழைத்துச் சென்றனர். மன்னர் தனியே மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டு இருந்தார்.
அந்த சமயத்தில், காட்டுவாசிகள் சிலர் தெய்வத்திற்கு நரபலியிட வேண்டி, ஒரு மனிதனை தேடினர். அவர்கள் கண்ணில் மன்னர் அகப்பட்டார். அவர்கள் மன்னரை சிறைபிடித்து காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். நரபலியிடத் தயாராகும் நேரத்தில், மன்னரின் கை கட்டை விரல், துண்டிக்கப்பட்டுள்ளதைக் கண்டனர். அடிபட்ட ஒருவரை அங்கஹீனம் உள்ள ஒருவரை நரபலியிடுவது முறையல்ல என்று கூறி மன்னரை விடுவித்தனர்.
உடனே மன்னருக்கு "எல்லாம் நன்மைக்கே, என்ற அமைச்சரின் வார்த்தை நினைவிற்கு வந்தது. தன்னுடைய கை கட்டை விரல் துண்டிக்கப்படாமல் இருந்திருந்தால், தான் உயிருடன் இருந்து இருக்க முடியாது, என்பதை உணர்ந்தார் மன்னர். அமைச்சருக்கு தவறுதலாக தண்டனை அளித்ததை எண்ணி மனம் வருந்திக் கொண்டே, சிறைச்சாலைக்குள் சென்று அமைச்சரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார். தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
உடனே அமைச்சர், மன்னரைப் பார்த்து "எல்லாம் நன்மைக்கே என்றார். மன்னர் அமைச்சரைப் பார்த்து, உங்களை ஒரு நாள் சிறையில் அடைத்து, மரண தண்டனை விதித்தேன். இதில் என்ன நன்மை இருக்கிறது? என்று வினவினார்.
அதற்கு அமைச்சர் சிரித்துக் கொண்டே, மன்னா ஒரு வேளை நீங்கள் என்னை சிறையில் அடைக்காமல், உங்களுடனேயே அழைத்துச் சென்றிருந்தால், அந்த காட்டுவாசிகள் விரல் இழந்த காரணத்தால் உங்களை விடுவித்து என்னை நரபலி கொடுத்து இருப்பார்கள்! அதனால் தான் எல்லாம் நன்மைக்கே என்றேன் என்றார் .
இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், சில நேரங்களில் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு தடங்கல்கள், பிரச்சனைகள் நமக்கு அந்த நேரத்தில் மிகப் பெரிய சுமையாக தெரியும். அதனை அப்படி நினைக்காமல், எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், அடுத்த பணியை தொடர்ந்து செய்ய ஏதுவாக இருக்கும்.
எழுந்து நடந்தால் இமய மலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும் என்பதை உணர்ந்து; அதற்கேற்றப்படி தன்னம்பிக்கையுடன் நீங்கள் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல