முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு - காஷ்மீர் வெள்ளத்தால் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், செப்.16 - ஜம்மு - காஷ்மீரில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 2 லட்சம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில வருவாய், நிவாரணம், மறுவாழ்வுத்துறை செயலாளர் வினோத் கௌல் கூறியதாவது:

மாநிலத்தில் பாலங்கள், சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது உள்கட்டமைப்பு வசதிகளுக்கும், அரசுக் கட்டிடங்களுக்கும் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவு ரூ.10 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீநகரின் 60 சதவீதப் பபகுதிகள் கடந்த 7-ஆம் தேதியன்று ஜீலம் நதியின் வெள்ள நீரால் சூழப்பட்டன. பல இடங்களிலும் ஜீலம் நதியின் கரைகள் உடைந்ததால் நகரின் 5 முக்கிய மருத்துவமனைகள் நீரில் மூழ்கின. இதில் மருத்துவமனைக் கட்டிடங்களுக்கு அதித சேதம் ஏற்படாத போதிலும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புடைய மருத்துவ சாதனங்கள் சேதமடைந்து விட்டன.

வெள்ள்ததால் 50 சிறிய, பெரிய பாலங்கள் சேதமடைந்துள்ளன. பல்வேறு முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காஷ்மீர் பள்ள்ததாக்கில் மீண்டும் மழை பெய்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பள்ளதத்தாக்கின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்ததால், மேலும் பாதிப்பு ஏற்படுமோ என்று அச்சம் மக்களுக்கு ஏற்பட்டது. அங்கு மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. மழை காரணமாக நிவாரணப் பணிகளுக்கு சற்று பாதிப்பு ஏற்பட்டது. வானிலை மோசமாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் விமானங்களை விமானப்படை தாற்காலிகமாக நிறுத்த வைத்தது.

எனினும், மருந்துகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான அத்தியாவசியச் சேவைகள் மீண்டும் கிடைக்கச் செய்வதை உறுதிசெய்வதே மாநில அரசின் முன்னுரிமைப் பணி என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர்அப்துல்லா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்களின் அளவை இரட்டிப்பாக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்