முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், நவ.19 - கர்நாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி 300-க்கும் மேற் பட்ட இந்து மத சாமியார்கள் பெங்களூருவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த போவதாக அம்மாநில‌ அரசு கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தது. இதனைக் கண்டித்து பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா, ஸ்ரீராம‌ சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. எனவே, அந்த சட்டத்தை கர்நாடக அரசு கிடப்பில் போட்டது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இந்து மத சாமியார்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம், பெண்கள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பெங்களூருவில் திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள‌னர்.

இந்த 3 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு பல்வேறு தலித் அமைப்புகளும் முற்போக்கு இயக்கங்களும், கன்னட எழுத்தாளர் மரளுசித்தப்பா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்