முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப்-2 தேர்வினை விருதுநகர் கலெக்டர் சிவஞானம் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் - விருதுநகர்; மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சிவகாசி மெப்கோ ஸ்லென்ங் பொறியியல் கல்லூரி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விருதுநகர் ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்ற குரூப்-2 தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-2-ல் உள்ளடங்கிய சார்பதிவாளர் நிலை-2, நகராட்சி ஆணையாளர் நிலை-2, உதவி பரிவு அலுவலர், தணிக்கை ஆய்வாளர்,தொழில் கூட்டுறவு அலுவலர், வருவாய் உதவியாளர் போன்ற பதவிகளுக்கு போட்டித்தேர்வுகள்   தமிழகம் முழுவதும் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால், விருதுநகர் வட்டத்தில் 18 தேர்வு மையங்களிலும், அருப்புக்;கோட்டை வட்டத்தில் 19 தேர்வு மையங்களிலும், இராஜபாளையம்; வட்டத்தில் 17 தேர்வு மையங்களிலும், சிவகாசி வட்டத்தில் 16 தேர்வு மையங்களிலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 12 தேர்வு மையங்களிலும் என மொத்தம் 51 தேர்வு மையங்களில் குரூப்-2 தேர்வினை எழுதுவதற்கு 22,117 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் இன்று 16,974(76.75மூ) நபர்கள் தேர்வு எழுதினர். 5,143(23.25மூ)  நபர்கள் தேர்வு எழுதவில்லை. இந்த குரூப்-2 போட்டித்தேர்வு நடைபெறும் மையங்களை தீவிரமாக கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக 82 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 82 ஆய்வு அலுவலர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 14 மொபைல் பார்டியும், துணை ஆட்சியர் நிலையில் 14 பறக்கும் படை அலுவலர்களும், 51 தேர்வு மையங்களுக்கும் 59 வீடியோகிராபர்களும்; நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், 09 வட்டங்களில்; உள்ள தேர்வு மையங்களில் நடைபெறும் தேர்;வினை கண்காணிப்பதற்கு 04 அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் வருகைபுரிந்;திருந்தனர் என மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம்  தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.உதயகுமார், வருவாய் வட்டாட்சியர்கள் திரு.பரமானந்தராஜா (சிவகாசி), திரு.சீனிவாசன் (விருதுநகர்), பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து