முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா - இந்தியா போட்டியில் கஜா புயல் விழிப்புணர்வு பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் இந்தியாவிற்கு எதிரான டி - 20 கிரிக்கெட் போட்டியில் கஜா புயல் குறித்து விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. கஜா புயலால் தமிழகம் மொத்தமாக நிலைகுலைந்து போய் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் மொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்த நிலையில் கஜா புயல் நிவாரணத்திற்கு உலக நாடுகள் முழுக்க இருக்கும் தமிழர்கள் உதவி வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் டெல்டா மக்களுக்காக நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தமிழர்கள், கஜா புயல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வித்தியாசமான விஷயம் ஒன்றை செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் போட்டியில் கஜா புயல் குறித்து பிரச்சாரம் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து