முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர் பதவி வழங்க இந்தியாவுக்கு 55 நாடுகள் ஆதரவு

வியாழக்கிழமை, 27 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர் பதவி வழங்க ஆசிய பசிபிக் குழுமத்தைச் சேர்ந்த 55 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2021-2022 ஆகிய ஆண்டுகளுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் இந்தியா போட்டியிடுகிறது. இந்நிலையில் ஐ.நாவின் ஆசிய - பசிபிக் குழுமத்தைச் சேர்ந்த மொத்தம் 55 நாடுகளும் இந்தியாவுக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இத்தகவலை உறுதிப்படுத்தி இருக்கும் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன், ஆதரவளித்த நாடுகளுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் அமெரிக்கா, ரஷ்யா,சீனா, பிரான்ஸ், ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியவை நிரந்தர உறுப்பினர்கள் ஆவர். மீதமுள்ள 10 நாடுகளும் தற்காலிக உறுப்பினர்களாவர். இவர் பிராந்திய அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 5 தற்காலிக உறுப்பு நாடுகள், ஐ.நா. பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இது இரண்டு ஆண்டுகளுக்கான பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து