முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என தமிழில் கூறி ஐ.நா. கூட்டத்தில் கனியன் பூங்குன்றனார் பாடலை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சங்க கால புலவரான கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகத்தை சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

எங்கள் நாட்டை சேர்ந்த மிக பெரிய புலவரான கணியன் பூங்குன்றனார், நாம் அனைத்து இடங்களுக்கும், அனைவருக்கும் சொந்தமானவர்கள் என்னும் பொருள்பட யாதும் ஊரே யாவரும் கேளிர் என சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடியுள்ளார். இதை மேற்கோளாக வைத்து ஐ.நா. சபையின் முக்கிய நோக்கங்களான நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளையும், கலாசாரங்களையும் பலப்படுத்தும் வகையில் இந்தியா கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளது. பிளவுபட்ட உலகம் என்பது யாருக்கும் ஏற்பு இல்லாத ஒன்றாகும். எல்லைகளுக்குள் எங்களை சுருக்கி கொள்ள நாங்கள் எப்போதும் விரும்பியது கிடையாது என குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தின விழாவை கொண்டாடும் வேளை இது. இந்தியாவில் 100 கோடிக்கு மேலானோர் வாக்களித்து இந்த அரசை தேர்வு செய்தனர். முன்னேறி வரும் ஒரு நாடு தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் மூலம் உலகின் மிகப் பெரிய சுகாதார இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து சென்று ஐந்தாண்டுகளுக்குள் 11 கோடி கழிப்பிடங்களை கட்டித்தர இயலுமானால் இந்த சாதனை ஒட்டுமொத்த உலகுக்கு ஊக்கமளிக்க கூடிய செய்தியாக அமையும்.

இந்தியாவில் 50 கோடி மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 370 மில்லியன் ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் துவங்கியுள்ளோம். தண்ணீரை சிக்கனப்படுத்தும் வகையில் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

2025-ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக காசநோய் ஒழிக்கப்படும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்து வருகிறோம். ஊரகப் பகுதிகளை தொலை தொடர்பு மூலமாக இணைக்க திட்டமிட்டுள்ளோம். எங்கள் நாட்டின் வளர்ச்சியே எங்களுடைய கனவு. எங்கள் நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளுக்கு உதவும் வகையில் இருக்கும். பயங்கரவாதத்தை அதிதீவிர கோபத்துடன் அணுகுவோம். அதே நேரம் பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். பயங்கரவாதிகளுக்கு சில நாடுகள் ஆதரவளித்து எங்களை காயப்படுத்தி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து